“இரண்டு தொகுதிக்கு இத்தனை மெனக்கெடலா?” “விஜய்யின் மாறிய பரப்புரை… காரணம் என்ன? “ஒன்பதாம் தேதி சொல்லும் பாடம் என்ன?”

எதோ ஒன்று இடிக்குதே…!தாம்தான் வெல்வோம் என்ற எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில்,தம்மை மக்கள் ஏற்பார்களா?மறுப்பார்களா? என்றே தெரியாத சூழலில்,எந்த ஒரு தேர்தல் முன் அனுபவமும் கூட இருக்காத சமயத்தில்,234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்ற பொதுத் தேரதலில்கூட இத்துனை மெனக்கடுகளை காண முடியவில்லையே,தோழமைக்கட்சிகள் என்று பெரிதாய் யாரும் வாராத சூழ்நிலையில் கூடஏனோ,தானோ என பரப்புரை செய்த நம் முதல்வர்,ஜோசப் விஜய் அவர்கள், இப்போது ஆட்சி அதிகாரம்,நிறைய கூட்டணி கட்சிகளின் பலம் என்றெல்லாம் இருக்கும் நிலையில் நடைபெறும் இரு தொகுதி இடைத் தேர்தலில் என்னமா உழைக்கிறார்,ஒரு தொகுதிக்குள்ளேயே 40 பகுதிகளுக்கு சென்று கையசைக்கிறார்,காப்பி குடிக்கிறார்,வண்டியில் இருந்து கீழே இறங்குகிறார்,ட்ராக்டர் ஓட்டுகிறார்,இருட்டிய பின்பும் பரப்புரை மேற்கொள்கிறார் என்றால் ஏதோ ஒன்று இடிக்கிறதேமக்களிடம் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?அடுத்த கட்சி உழைப்பில் நின்று வென்று வாக்களித்த அந்த மை கூட காயாத நிலையில்பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அவர்களே களத்திற்கு வந்துள்ளதை மக்கள் ரசிக்கவில்லை என்ற தகவல் ஒரு வேலை கசிந்துள்ளதோ,அதனாலோ என்னவோ விஜய் தனது இயல்பை மாற்றி ரவுண்டு கட்டுகிறாரா? என மக்கள் பேசுவது காதில் விழுகிறது,காசுகூட தண்ணியாய் கொட்டுகிறதாமே,கொடுக்கமாட்டோம் என்று சொன்னவர்கள் தரப்பிலிருந்து !?ஒன்பதாம் தேதி பாடம் கிடைத்தால் சரி இல்லையெனில் படம் நல்லா ஓடாது. “சமுதாயத் தொண்டன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன