ஆசிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் அசத்தல்! 85 பதக்கங்களுடன் 4வது இடம்!ஹாக்கி, கிரிக்கெட்,துப்பாக்கி சுடுதல், குத்துசண்டை, வில்வித்தை போட்டிகளில் பல சாதனை!

20வது ஆசிய விளையாட்டு 2026 போட்டிகள் ஜப்பானின் நாகோயா (Aichi-Nagoya) போன்ற முக்கிய நகரங்களில் நடை பெற்று போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடங்கி 04 அக்டோபர் நடந்து முடிந்தது… மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டிகளில் பல ஆசியா நாடுகளில் இருந்து மிக சிறந்த வீரர்,வீரங்கனைகள் கலந்து கொண்டு தன் திறமயை வெளிப்படுத்தினர்.

𝟰 வது இடம்

இறுதி பதக்க பட்டியலின் முடிவில் இந்தியா 4வது இடம் பிடித்தது. சீனா,ஜப்பான்,தென் கொரியா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன. உஷ்பேகிஸ்தான் 5வது இடம் பிடித்தது.

இந்தியா 85 பதக்கங்கள் வாரியது…

இந்தியா தங்கம் 21,வெள்ளி 27, வெண்கலம் 37 மொத்தம் 85 பதக்ககளை பெற்றது. ஹாக்கி, கிரிக்கெட்,துப்பாக்கி சுடுதல், குத்துசண்டை, வில்வித்தை மற்றும் பல போட்டிகளில் பல சாதனைகளை படைத்தது.

ஹாக்கிஇல் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்று உலக ஹாக்கி லாஸ் ஏன்சல்ஸ் 2028 போட்டிக்கு தகுதிபெற்றது.

அதே போல கிரிக்கெட் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது.

குறிப்பாக தடகள விளையாட்டுக்களில் 24, துப்பாக்கி சூடு 15 மற்றும் வில்வித்தயில் 9 பதக்கங்களை இந்திய வீரர்,வீரங்கனைகள் பெற்றதன் மூலம் போட்டி பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் முன் நுழைய உதவியது.

சாதனையுடன் ஜோலித்த தமிழக வீரர், வீராங்கனைகள்…

தமிழக வீரர்,வீரங்கனைகளும் பல குறிப்பிட்ட சாதனைகள் படைத்தனர் முக்கியமாக வித்யா ராம்ராஜ்(தடகளம் ), G கமலினி (கிரிக்கெட் ), விஷால் TK (தடகளம்), A ஹரிஹரன் (பேட்மின்டன்), விஷால் T கயல்விழி (தடகளம்), பரணிக்க (தடகளம்), வேலவன் செந்தில்குமார்(ஸ்குவாஷ்), ஜோஷ்ணா சின்னப்பா(ஸ்குவாஷ்), நேத்ரா குமணன்(சாய்யிலிங்) , ராஜேஷ் ரமேஷ்(தடகளம்), ஷாமீனா ரியாஸ்(ஸ்குவாஷ்), அபிநயா ராஜராஜன்(தடகளம்) மற்றும் ஹரிஹரன்(பேட்மின்டன்) போன்ற தமிழக வீரர்,வீரங்கனைகளும் சாதனைகள் படைத்தனார்.

தமிழக முதல்வர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களும் பாராட்டிதமிழக அரசு சார்பில் சுமார் 6.9 கோடி பரிசு அறிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர்களும் மற்றும் தமிழக தலைவர்களும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் அறிவித்து வருகின்றனர்.இந்திய வீரர்,வீரங்கனைகளுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் நாடேங்கிலும் குவிந்தவண்ணமக உள்ளது.கடந்த 2022 ஆசியா விளையாட்டு போட்டிகளில் இந்தியா 106 பதக்ககளை வென்றது குறிப்பிடத்தக்கது. மிக சிறிய இடை வெளியில் பல பதக்கங்களை இழந்தாலும் அடுத்து வரும் உலக போட்டிகளில் வென்று இந்தியா பல சாதனைகளை படைக்கும்.இளம் வீரர்,

வீராங்கனைகளின் எழுச்சியுடன் இந்திய விளையாட்டுத்துறை தொடர்ந்து முன்னேறட்டும்!

வாழ்க இந்தியா!

வாழ்க தமிழ்நாடு!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன